Blogger Meaning in Tamil - BlogsCoach

Blogger Meaning in Tamil 

Blog என்றால் 'வலைப்பதிவு' என்று பொருள்.

வலைப்பதிவா ...?

அது என்ன ?
அது எதற்கு ?
அதில் எனக்கு என்ன பயன் ?
அதில் நான் வருவாய் ஈட்ட முடியுமா ?

என்று நீங்கள் தேடுவது எனக்கு புரிகிறது. அதைப்பற்றி சில குறிப்புகளை இந்தக்  கட்டுரையில் காண்போம்.

முன்பெல்லாம் சில தகவல்களை தெரிந்து கொள்வதற்கு நாம் புத்தகங்களை வாசித்து தெரிந்து கொள்வோம். ஆனால் இப்போதெல்லாம் இணையதளம் (Internet)  சேவை உலகமெங்கும் காணப்படுகிறது.

இணையதளத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு தான் செல்கிறது.

சிறுவர்கள் முதல் முதியோர்கள் வரை இணையத்தை தினமும் உபயோகிக்கின்றனர்.

Blogging ::

Blogging என்பது ஒரு தனி நபரால் (அ) ஒரு குழுமத்தினால் அவ்வப்போது இணையத்தில் தகவல்களை அவர்களது வலைத்தளத்தில் (Website) பதிவு செய்வதாகும்.

வலைப்பதிவு - வலைத்தளத்தில் பதிவு செய்வதினால், வலைப்பதிவு என்கிறோம்.

(Blogs are Regularly Updated over a Period of Time, it may be within a Week, a Month, or a Year)

நமக்கு எதாவது சந்தேகம் ஏற்பட்டால், அதை தீர்த்துக்கொள்ள 'Google'  லில் தேடுகிறோம்.

ஒன்றல்ல, இரண்டல்ல பல பதில்கள் நமக்கு உடனடியாக கிடைத்துவிடும். அதுவே இணையத்தின் சிறப்பம்சம்.

Blogger ::

Blogs (கட்டுரைகள்) எழுதுவோரை Blogger என்று கூறுவர்.

Blogger - பதிவர்

Blogger கள் தங்களுக்கு தெரிந்த தகவல்களை கட்டுரையாக எழுதி இணையத்தில் பதிவு செய்வர்.

Blogs (vs) Websites  ::

Website - website என்றால் ஒரு  குழுமத்தினால் (அ) அரசாங்கத்தினால் எப்போதாவது பதிவு செய்வதாகும். அவை நிலையான தகவல்களாகும்.

Website இல் தேவைப்படும்போது மட்டுமே புதிய பதிவுகளை செய்வர்.

ஆனால், மாறாக  Blogs  என்பவை அவ்வப்போது புதிய பதிவுகளை இடுவதாகும்.

'Blogging' மூலம் வருவாய்  எப்படி?


கட்டுரைகள் மட்டும் எழுத தெரிந்தால் போதும். அதை சரியான வாசிப்பாளர்களிடம் கொண்டு சேர்த்தால், அதிலிருந்து நிச்சயம் வருவாய் காண முடியும்.

ஆம்,  Blogging  மூலம் கண்டிப்பாக வருவாய் ஈட்ட முடியும்.

வருவாய்க்கான வழிகள்  ::

  • Google Ads (விளம்பரங்கள்)
  • Affiliate Marketing 
  • Freelancing

மற்றும் பல்வேறு வழிகள் உள்ளன. இவ்வாறு Blogging என்பது தெரிந்து கொள்வதற்கு மட்டுமல்ல, அதை சரியாக செய்தால் அதிலிருந்து நல்ல வருவாய் காண முடியும்.

மாணவர்களுக்கு  Blogging  ஒரு சிறந்த வருவாய் தரும் தொழில் ஆகும். ஏனெனில் இதற்கு எந்த வித முதலீடும் தேவையில்லை. சிறுது அறிவுத்திறன் மட்டுமே போதுமானது.

Blogging பற்றி மேலும் அறிந்து கொள்ள (www.blogscoach.in) என்ற website இல் தேடுங்கள்.

ஏதாவது சந்தேகம் இருந்தால் கீழே உள்ள Comments section இல் கேளுங்கள்.

மேலும் அறிக, ....
👉🏻 BlogsCoach - Online Business 👈🏻 

நன்றி.