Vlog Meaning In Tamil | Vlog என்றால் என்ன?

Indhu Prakash
By -
3

Vlog Meaning In Tamil

Vlog meaning in tamil, blogscoach
Vlog, Vlogging and Vloggers என்பதன் பொருள் என்னவென்று, இந்த விரிவான பதிவில் காண்போம்.

(toc) #=(Table Of Contents)

Vlog Meaning In Tamil With Example

Vlog என்பது (Video + log) என்பதன் சுருக்கம் ஆகும்.


Vlog என்பது, ஒரு வகையான தகவல். அந்த தகவல் ஆனது Video Format இல் இருக்கும். அதனால் தான் Vlog என்று கூறுவர்.

இதே தகவல் எழுத்து வடிவில் இருந்தால், அதனை Blog எனக் கூறுவர். (alert-passed)

Vlogging ஐ ஒரு தொழிலாக எடுத்து செய்வோரை Vloggers என்று கூறுவர்.


YouTube, Facebook, Instagram, TikTok போன்ற சமூக வலைத்தளங்களின் வளர்ச்சியை தொடர்ந்து, இது போன்ற வார்த்தைகள் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. இது போன்ற வார்த்தைகளுக்கான அர்த்தங்களை அறிந்து கொள்ளலாம், வாருங்கள்!


தற்போதைய தொழில்நுட்ப உலகில், vlogging என்பது மிக வேகமாக வளர்ந்து வரும் தொழில் ஆகும். ஆரம்பத்தில் ஒரு பொழுதுபோக்காக இருந்து வந்த Vlogging, தற்போது பலருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தந்துள்ளது.


சமைப்பது, நிகழ்ச்சி, பயணம், கற்றல், விளையாட்டு, அரசியல் போன்ற அனைத்தும் Vlog வடிவில் உருவாக்கி பதிவிட்டு வருகின்றனர்.


Vlog என்பது,

  • கல்வி,
  • செய்தி,
  • அரசியல்,
  • அறிவியல்,
  • விளையாட்டு,
  • உலக நடத்தை,
  • வாழ்க்கைமுறை மற்றும்
  • பொழுதுபோக்கு.
போன்ற தகவல்களாக இருக்கும்.


Personal Vlog Meaning In Tamil

personal vlog meaning in tamil, blogscoach

இவர்கள் தங்களின் தினந்தோறும் செய்யும் வேலைகளை மற்றும் நிகழ்ச்சிகள் என இவர்கள் தினசரி வாழ்க்கையில் நிகழும் அனைத்தையும் Vlog ஆக பதிவிடுவர்.

இவர்கள் எப்பொழுதும் Camera வும் கையுமாக இருப்பார்கள். தான் செய்யும் வேலை, பேச்சு, விளையாட்டு என அனைத்தையும் வீடியோவாக பதிவு செய்து, தங்களின் Channel லில் பதிவு செய்வர்.

இப்படிப்பட்ட பதிவில் பெரும்பாலும் பொழுதுபோக்கு Vlog ஆகவே இருக்கும்.

Travel Vlog Meaning In Tamil

travel vlog meaning in tamil, blogscoach

பயணம் செய்வது தான் இவர்களின் முக்கிய வேலை. பயணத்தில் செல்லும் வலியெல்லாம் ஒரு Camera உடன் இருப்பர்.

முக்கிய இடம், இயற்கை, நகரம், நாடு என இவர்கள் எங்கு சென்றாலும் அதனை Vlog ஆக எடுத்து பதிவிடுவர். அதான் அவர்களின் பிரதான வேலை.

இதை பற்றி மேலும் அறிந்து கொள்ள, தமிழ் travel vloggers என்றழைக்கப்படும் 'Backpacker Kumar' மற்றும் 'Tamil Trekker' போன்றோர் youtube சேனலை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

இன்றைய உலகில் Vlogging செய்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு தான் செல்கிறது.


மிகச்சிறந்த Vlogger கள் நிறைய வருவாய் ஈட்டியும் வருகின்றனர். Vlogging உலகில் பல்வேறு நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகி உள்ளது.


Vlogging செய்வதற்கு தேவையான பொருட்கள் என்று சொல்லப்படுவது ஒரு Camera மற்றும் இணையதளமே ஆகும்.


அது தவிர அவரவர்கள் தங்களுக்கு பிடித்த Editing Software களை பயன்படுத்தி vlog இன் தரத்தை உயர்த்தி பதிவிடுவதும் உண்டு.


இதனால் தற்போதைய உலகில், Vlogging பலருக்கு வருவாய் ஈட்டி தருகிறது. மேலும், Vlogging தற்போதைய உலகில் ஒரு முக்கிய பங்காற்றி வருகிறது.


இந்த பதிவில் ஏதாவது பிழையோ அல்லது, திருத்தங்கள் இருந்தால் எனக்கு தெரிவியுங்கள். உடனடியாக திருத்தம் செய்யப்பட்டு, மறுபதிவு செய்யப்படும். 🙂


இது போன்று 👉🏻  'Blogging' ஐ பற்றி இங்கு அறிந்து கொள்ளுங்கள்!


மேலும் சந்தேகங்களுக்கு கிழே உள்ள 'Comments Section' இல் கேளுங்கள். அடுத்த பதிவில் சந்திப்போம்!


நன்றி!


- BlogsCoach


Tags:

Post a Comment

3Comments

Share Your Thoughts Here, ...

Post a Comment